Poster Exhibition @ Cedar Park on May 5th 2024
மகான் ஒருவரை சந்தித்த அரசன் ஒருவன், "சுவாமி, எனக்காக இறைவனிடம் வேண்டுங்கள்!' எனக் கோரிக்கை வைத்தான். "ஆண்டவா... அகிலத்தில் உள்ள அனைவரையும் நன்றாக வை...!' என வேண்டினார் மகான். மன்னனுக்கோ தனக்காகத் தனிப்பட்ட முறையில் வேண்டவில்லையே என்று மனக்குறை எழுந்தது. அதனை உணர்ந்த மகான், "மன்னா, வயலில் நீர் பாய்ச்சும்போது செடிகளின் வேரில்தான் நீர் விடப்படும். ஆனால் அது எப்படி செடியின் முழுமைக்கும் பயன்படுகிறதோ, அப்படித்தான் இதுவும். உலகில் உள்ள எல்லோரும் எனும்போது அதில் நீயும் இருக்கிறாய் அல்லவா? அப்புறம் ஏன் தனியாகப் பிரார்த்திக்க வேண்டும்?' சொல்ல, உணர்ந்தான் அரசன். ஜி.கே.எஸ். மூர்த்தி, கோபி
ஜி.கே.எஸ். மூர்த்தி, கோபி